Categories
தேசிய செய்திகள்

500 கி.மீ. தடை செய்யப்பட்ட பகுதியாக திடீர் அறிவிப்பு…. காரணம் இது தானாம்…!!!

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.  ராமர் கோயிலை சுற்றி 500 கி.மீ. சுற்றளவு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மத சடங்குகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் வர்த்தகம் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை என்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆணையத்தின் துணை தலைவர் விஷால் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அயோத்தி இந்த பகுதியில் கட்டிடங்கள் அதிகபட்சமாக 7.5 மீட்டர் உயரமாக மட்டுமே இருக்க வேண்டும். ராம ஜென்ம பூமியின் பாதுகாப்பு மற்றும் ராமர் கோவிலின் புனிதத்தை கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்கள், குளங்கள், வடிகால்கள் மற்றும் பிற நீர் ஆதாரங்கள் பாதுகாப்பும் மெகாத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அத்தகைய இடங்களில் ஆறு மீட்டர் சுற்றளவில் எந்த கட்டுமானமும் இருக்காது  என்றும் தெரிவித்துள்ளது.

 

 

Categories

Tech |