பொலீஸ் எனக்கூறி வசூல் வேட்டையில் இறங்கிய இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் குழித்துறை பகுதியில் சொகுசு வாகனத்தில் காவல் சீருடையில் வந்த நபர் ஒருவர் தன்னை காவல்துறை அதிகாரி எனக் கூறி வாகன சோதனையில் ஈடுபட்டார். பின்னர் அவ்வழியாக முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் 500 முதல் 5000 வரை வசூல் செய்ய தொடங்கியுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் அந்த நபரின் சீருடையை பார்த்து சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மடக்கிப் பிடித்து விசாரித்தார்.
அப்போது அந்த நபர் தான் வன்னியூரை சேர்ந்த பிபின் என்றும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தனியார் செக்யூரிட்டியாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரிவதாக கூறி ஐடி கார்டு ஒன்றை கட்டியுள்ளார் இதனை தொடர்ந்து களியக்காவிளை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த அவர்கள் போலி காவல் அதிகாரியை கைது செய்து அழைத்துச் சென்றனர்.