தென்னிந்திய சினிமாவில்முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது அன்ஷுமாலிகா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நடிகை ரோஜா தற்போது ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் துறை அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் குறிப்பாக துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் சமீப காலமாகவே தகவல்கள் பரவியது. இந்த தகவல்களுக்கு தற்போது இயக்குனர் ஆர்.கே செல்வமணி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய மகள் சிறுவயதிலிருந்தே நன்றாக படிக்க கூடியவள்.
இதுவரை 500-க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியுள்ளார். என்னுடைய மகள் 12-ம் வகுப்பு முடித்த பிறகு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவள் விருப்பப்படியே நாங்களும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வைத்துள்ளோம். அவள் தற்போது அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் 4 வருடங்கள் தங்கி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க இருக்கிறார். இன்னும் 4 வருடங்களுக்கு அமெரிக்காவில் இருக்கக்கூடிய என்னுடைய மகள் படங்களின் நடிப்பார் என்று கூறுவதெல்லாம் வதந்தி. மேலும் தற்போது வெளிவரும் எந்த செய்தியிலும் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.