தமிழகத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் வியாழக்கிழமை சென்னையில் துவங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தயாராகி உள்ளது. இதற்கு பல நாடுகளிலும் இருந்து வீரர்கள் வர உள்ளனர் இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை தொழிலாளி யுஎம்டி ராஜா 500 மில்லி கிராம் தங்கத்தில் செஸ் காயின்களை செதுக்கி வடிவமைத்துள்ள விழிப்புணர்வு சிற்பம், அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. யூ எம் டி ராஜா ஏற்கனவே தங்கத்தில் பல்வேறு விழிப்புணர்வு சிற்பங்கள் வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories