Categories
மாநில செய்திகள்

500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால்…. 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து?…. தமிழக மின்வாரியம் திடீர் விளக்கம்….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அரசு அறிவித்திருந்தது. இந்தச் செய்தியை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் தமிழகத்தில் வந்துள்ள மின் கட்டண உயர்வு மற்றும் சீர்திருத்தங்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

முக்கியமாக 1-Dசீர்திருத்தம் ஆனது வாடகை வீடு மற்றும் அறைகளில் வசிப்பவர்களுக்கு சவாலாக உள்ளது .இந்த விதிப்படி ஒரு யூனிட்டுக்கு எட்டு ரூபாய் மட்டும் ஒரு கிலோ வாட்சுக்கு ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் 100 யூனிட் வரை பயன்படுத்தினால் 2800 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்ற சீர்திருத்தம் மக்களுக்கு சுமையாகவே உள்ளது.

வீட்டு உபயோகத்திற்கு இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்களுக்கு மேல் பயன்படுத்தினால் 100 யூனிட் இலவசம் மின்சாரம் இல்லை என பலரின் மொபைல் ஃபோன்களுக்கு குறுஞ்செய்தி வருகின்றது. இது பற்றி மின்வாரியம் விடுத்த செய்தி குறிப்பில், குறுஞ்செய்தி மூலமாக பரவி வரும் தகவல் முற்றிலும் போலியானது,அனைத்து வீட்டு மின் நுகர்வோருக்கும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |