Categories
மதுரை மாவட்ட செய்திகள்

500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கமா….? 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!!

கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்ற விவகாரத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள பழையூரில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மருதபாண்டி(29), சரத்குமார்(29) ஆகிய இரண்டு பேரும் தாங்கள் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுகளை விக்னேஸ்வரனிடம் கொடுத்து மது பாட்டில் வாங்கி வருமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து விக்னேஸ்வரன் கொடுத்தது 500 ரூபாய் கள்ள நோட்டு என்பதை அறிந்த மதுபான கடை ஊழியர் பொதுமக்களின் உதவியோடு விக்னேஸ்வரனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விக்னேஸ்வரன் அளித்த தகவலின் படி விக்னேஸ்வரன், மருதுபாண்டி, சரத்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களுக்கு கள்ள நோட்டு எப்படி கிடைத்தது? வேறு எங்காவது கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டிருக்கிறார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |