கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னியம்பாளையம் ஊராட்சியில் பாலசுப்பிரமணியன் என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு குப்பைகளை சுத்தம் செய்யும் பணிகளுக்கு பணம் வழங்க சக்திவேல் என்பவரிடம் பாலசுப்பிரமணியன் 500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சக்திவேல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து சக்திவேல் பாலசுப்ரமணியிடம் பணத்தை கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பாலசுப்பிரமணியனுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.