Categories
தேசிய செய்திகள்

“ரூ.‌ 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது”….. நொறுங்கிய முட்டையை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது….. மத்திய அரசு கோர்ட்டில் வாதம்….!!!!!

இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பிறகு புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கும் பொது மக்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2016-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட போது அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றாலும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது என்று கூறினார்.

அதன் பிறகு அரசின் பொருளாதார கொள்கையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை எனக் கூறிய நீதிபதிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டதோடு வழக்கை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். இந்நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட 58 ரீட் மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. ‌ இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பண மதிப்பிழப்பு கொள்கையை முடிவு செய்வதில் இந்திய ரிசர்வ் வங்கியின் பங்கு இருக்கிறது என்பதில் விவாதம் இல்லை என்றனர்.

அதன்பிறகு இந்திய ரிசர்வ் வங்கியின் சட்ட நடவடிக்கைக்கு ஒத்துப் போகவில்லை என மனுதாரர்கள் தரப்பு கூறியதற்கு நீதிபதிகள் விளக்கம் கேட்டனர். இந்நிலையில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடிகாரத்தை மாற்றி பழைய நேரத்தை திருப்பி காட்டுவது நொறுங்கிய முட்டையை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி கொண்டு வருவது போன்றதாகும் என்றார். அதன் பிறகு பண மதிப்பிழப்பு என்பது தனிப்பட்ட பொருளாதார கொள்கைகள் கிடையாது. அது ஒரு சிக்கலான பண மதிப்பிழப்பு என்பதால் வேறுபட்ட நடவடிக்கைகளே பின்பற்றப்படும்.

ஆர்பிஐ தனியாக செயல்பட வேண்டும் என்பது மனுதாரர்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் ஆர்பிஐ மற்றும் அரசாங்கம் ஒத்துழைத்து செயல்படுவதை வளைந்து போகக்கூடிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இந்த வழக்கில் எளிதில் நிவாரணம் அளிக்கக்கூடிய தீர்வை காண முடியாது என்பதால் கோர்ட் அவ்வளவு எளிதில் தீர்ப்பை கூற முடியாது என்றார். மேலும் வாதம் முடிவடையாத நிலையில் நீதிபதிகள் வழக்கின் விசாரணையை டிசம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Categories

Tech |