Categories
மாநில செய்திகள்

500 முகாம்… 40,000 பேருக்கு சோதனை…. இந்தியாவிலே நாம் தான்…. அசத்தும் சுகாதாரத்துறை …!!

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது, இதுகுறித்து சுகாதாரத் துறை செக்ரெட்டரி கூறுகையில், லேசாக காய்ச்சல், உடல் சோர்வு, தொண்டை கரகரப்பு இது போன்ற அறிகுறிகள் இருந்தாலே அவர்களுக்கு சோதனை செய்து கண்காணிக்கப்படுகிறது. சென்னையில் மட்டும் 550 முகம் 40 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலே  தமிழகத்தில் தான் அதிக படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் உள்ளன. மேலும் அதிகமான படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகள் அமைக்க முதலமைச்சர் அவர்கள் ஆணை பிறப்பித்து உள்ளனர்.

ஹெல்த் சென்டர் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக மக்கள் கடைபிடிக்க வேண்டியது முகக்கவசம் அணிவது, கையுறை அணிவது, இரண்டு அடி தள்ளி நின்று பேசுவது, இவற்றை கட்டாயமாக கருத்தில்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். நாம் எந்த பணி செய்தாலும் இவற்றைக் கடைபிடித்து வந்தால் நமக்கு தொற்று வருவது குறையும்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பிளாஸ்மா இரத்தத்தின் மூலம் எடுக்கப்பட்டு  தீவிர சிகிச்சையில் இருக்கும் நபர்களுக்கு செலுத்தி அவர்களை குணமாக்க தமிழ்நாட்டில் சென்னை,மதுரை,திருநெல்வேலி ஆகியவற்றில் சிறப்பம்சமாக செயல்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சித்த மருத்துவம் மூலமாகவும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வர மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளது.

Categories

Tech |