Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினா ரூ.500 அபராதம்.. வழக்குப்பதிவு செய்வோம்: சென்னை காவல்துறை!

சென்னையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம், மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அதேபோல, காவல்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக எளிதாக தோற்று நோய் பரவும் என்பதால், வீட்டை விட்டு மக்கள் வெளியே வரும்போது முக கவசங்கள் அணிந்து வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், முககவசம் அணியாமல் வெளியே வரும் நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் 179 கீழ் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் முககவசம் அணியாமல் வெளியே வரும் வாகன ஓட்டுநர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல, அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மாநகராட்சி ஆணையர் சென்னையில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என தெரிவித்திருந்தார். அந்த உத்தரவின் பேரில், இன்று காலை முதல் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை, 1,263 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |