பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என்று மொத்தம் 500 பேருக்கு தலைமை ஆசிரியர்கள பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளியில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறைக்கு அரசு அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில் முதுநிலை ஆசிரியர்கள், உரிய கல்வித் தகுதி உடைய பள்ளி, கல்வி அலுவலர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இதில் 500 பேருக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் பட்டியலை பள்ளிக் கல்வித்துறை தயாரித்தது. இந்த பட்டியலில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து பட்டியலில் உள்ள ஆசிரியர்களின், கல்வி தகுதி, விவரங்கள் போன்றவற்றை சரி பார்த்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.