கொரோனாவை குணமாக்கும் என்ற வதந்தியால் கொல்கத்தாவில் ஒரு லிட்டர் மாட்டு கோமியத்தை 500 ரூபாய் கொடுத்து வாங்கி செல்கின்றனர்.
உலகையே கொலை நடுங்கச்செய்து வருகிறது கொரோனா. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையே கொரோனாவை மாட்டு சாணம் மற்றும் மாட்டு கோமியம் குணமாக்கும் என்ற வதந்தியும் கொரோனா வைரஸ் போல பரவிவருகிறது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் மாட்டு கோமியத்தை குடித்து வருகின்றனர். இந்நிலையில் 2 மாடுகளை வளர்த்து வரும் கொல்கத்தாவை சேர்ந்த மகபூப் அலி என்பவரிடம், சுற்று வட்டாரத்தில் உள்ள சிலர் ஒரு லிட்டர் மாட்டு கோமியத்தை வாங்கி செல்கின்றனர்.
இது குறித்து மகபூப் அலி கூறுகையில், ஒரு லிட்டர் மாட்டு கோமியத்தை ரூ 500க்கும், ஒரு கிலோ மாட்டு சாணத்தை ரூ 500க்கும் மக்கள் வாங்கி செல்வதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு மாட்டின் பாலில் இருந்து கிடைக்கும் வருமானத்தை விடவும் இதில் பல மடங்கு வருமானம் கிடைப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
மாட்டு சாணம் மற்றும் மாட்டு கோமியம் கொரோனாவை குணமாக்கும் என்று எந்த ஒரு மருத்துவரும் சொல்லவில்லை, மருத்துவ அறிக்கையும் இதுவரை அதிகார்வப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது