விரைவு ரயில்களுக்கு பதிலாக 500 நவீன தேஐஸ் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது .
500 நவீன வகை ரயில்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. முதலாவது நவீன தேஜஸ் ரயில் டெல்லி ஆனந்த் முனையத்தில் இருந்து வருகிற 15-ஆம் தேதி இயக்க உள்ளது. ஏற்கனவே இயங்கி வந்த அகர்தல- டெல்லி ராஜஸ்தானி ரயில் பதிலாக இந்த தேஜஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. நீண்ட தூரம் செல்லும் விரைவு ரயில்களுக்கு மாற்றாக நவீன தேஜஸ் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. விரைவில் 500 வகைகளை தயாரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது