Categories
மாநில செய்திகள்

5000 ஆசிரியர்களுக்கு இனிப்பான செய்தி….. அமைச்சர் வெளியிட்ட தகவல்…. என்ன தெரியுமா….?

தமிழகத்தில் ஐடி பூங்காக்களில் 5000 ஆசிரியர்கள் மற்றும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ‘தமிழ்நாடு ஸ்டார்ட்அப் வளர்ச்சி மாநாடு’ என்ற தலைப்பில் கோவையில் தனியார் கல்லூரியில் இரண்டு நாள் மாநாடு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர். இரண்டாவது நாளான இன்று விழா முடிந்த பிறகு மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது: “கடந்த இரண்டு நாட்கள் தமிழகத்தில் பல்வேறு புதுமைகளை கண்டுபிடிப்போர், தொழில்முனைவோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு காத்துள்ளது. புதுமைகளை கண்டுபிடிப்போர், தொழில்முனைவோரை தமிழக அரசு வரவேற்கிறது. தமிழகத்தில் தரமான ஐ.டி படிப்பை பெறுவதற்காக தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்க உள்ளோம்.

மேலும் தமிழகத்தில் படித்த இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால் அவர்கள் ஐடி போன்ற துறைகளுக்கு வரும்போது பெரும் சவால்களை சந்திக்கின்றனர். இவற்றைப் போக்க வேண்டும் என்பதற்காக பல வழிமுறைகளை மேற்கொண்டுள்ளோம். தமிழகத்தில் ஐடி பூங்காக்களில் 5,000 ஆசிரியர்கள், ஒரு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.

Categories

Tech |