Categories
உலக செய்திகள்

5000 இஸ்லாமிய குடும்பங்கள் வசித்த முகாமில் தீ விபத்து.. 3 பேர் பலியான சோகம்.. பலர் காணாமல் போனதாக தகவல்..!!

வங்கதேசத்தில் 5000 ரோஹிங்கியா இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வந்த அகதிகள் முகாமில் தீ விபத்தில் 3 நபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வங்கதேசத்தில் காக்ஸ் பஜாரில் உள்ள உக்கியாவில் பலுகாலி ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென்று இந்த முகாமில் தீப்பற்றி எரிந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் பலர் மாயமானதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது முதலில் ஐ பிரிவில் தீ ஏற்பட ஆரம்பித்து பின் bமற்றும் c பிரிவு அறைகள் வரை பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் விரைவாக செயல்பட்டு தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த முகாமில் ஏறக்குறைய 5000 ரோஹிங்கியா இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |