தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியமைத்ததையடுத்து நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து முதன்முறையாக இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான வேளாண் பட்ஜெட்டை திமுக அரசு வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டியுள்ளது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பயன் தரும் பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 10 குதிரைத்திறன் வரையிலான 5000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில் நிறுவப்படும். இத்திட்டம் ரூ.114 கோடியே 68 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.