Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

5000 பேருக்கு வேலை…! தமிழர்களை எடுங்க… ஐகோர்ட் அரசுக்கு உத்தரவு …!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5000 கேங்க் மேன் பணியிடங்களை நிரப்பி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் கள்ளப்பணிக்காக உருவாக்கப்பட்ட Gang man பணிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்று 2019 மார்ச் மாதம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்து மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்த ஊழியர்களும், அவர்களது சங்கங்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்தனர். அந்த வழக்குகளில் மின் வாரியத்தில் பல ஆண்டுகளாக களப்பணி செய்த ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யாமல் புதிதாக Gang man பணியிடத்தை உருவாக்கி தேர்ந்தெடுப்பது ஏற்புடையது அல்ல என்பதால் அதற்கு தடை விதிக்கவேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளில் ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, மின் வாரியத்தில் Gang man பணியிடங்களை நிரப்பும் அறிவிப்புக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுஇருந்தார். இதை எதிர்த்து மின் வாரியம் சார்பில் தாக்கல் செய்த முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி, செந்தில் குமார், ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், அனைத்து விதிகளும் முழுமையாக பின்பற்றப்பட்டு உள்ளதாகவும், உடல் தகுதி தேர்வு உள்ளிட்ட 70% பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் கூறினார். புதிதாக கேங்மேன் நியமிக்கப்பட்டாலும், ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் எடுத்துரைத்தார் .

அரசு தரப்பின் இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,  5000 கேங்மேன்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர். 5000 பேருக்கு வேலை வாய்ப்பு என்பது மிகப்பெரிய கொடை, எனவே இதில் மாநில அரசு நேர்மையாக செயல்பட்டு அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டியது அவசியமாகிறது. அதைவிட முதன்மையானது, வட மாநிலத்தவர்கள் ஊடுருவாமல் தடுப்பது, ஏனென்றால், தமிழ்நாடு மின் வாரியத்தில் காலியாக இருந்த 300 உதவி பொறியாளர் பணிக்கு கடந்த ஆண்டு தேர்வானவர்களில் 39பேர் ஆந்திரா, கேரளா, கர்நாடகா,  உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், டெல்லி மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கான மாத சம்பளம் 50,000. ஊட்டி ஆயுத தொழிற்சாலையில் வட இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட வழக்கு ஒன்றில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், அவர்களின் தாய் மொழியான ஹிந்தியில் தேர்ச்சி பெறாத நிலையில் தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெறுவது எப்படி ? என்ன கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கிருபாகரன் – புகழேந்தி அமர்வு, பணித் தேர்வுகள் நேர்மையாகவும் , வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும் என வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |