Categories
தேசிய செய்திகள்

5000 ரூபாய் இல்லாததால் இப்படி ஒரு கொடூரமா…. தாயின் உடலை மூட்டை கட்டி…. ஐயோ….!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள அன்பூர் மாவட்டம் கோதாறு கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மூதாட்டி ஜெய்மந்திரி யாதவ் (70) உடல் நலக்குறைவு காரணமாக 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் உடலை தங்களது கிராமத்திற்கு அழைத்துச் செல்ல அவரது மகன் ஆம்புலன்ஸ் தேடி உள்ளார்.

குறைந்தபட்சம் ஐந்தாயிரம் கொடுத்தால் மட்டுமே வருவோம் என்று ஓட்டுநர்கள் கூறியுள்ளனர்.அவ்வளவு பணம் இல்லாத அந்த இளைஞர் நூறு ரூபாய் மதிப்புள்ள மரப்பலகையை வாங்கி தனது பைக்கில் வைத்து கட்டினார். அதில் தவழ்ந்து தாயின் உடலை வைத்து சொந்த கிராமம் நோக்கி புறப்பட்டார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |