5000 வருடங்களுக்கும் பழமையான மது ஆலை ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்து நாட்டில் 5000 வருடங்களுக்கு முன்பு செயல்பட்டு வந்த மது ஆலையை தொல்பொருள் ஆராய்ச்சிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த மது ஆலை கிமு 3150 முதல் 2513 வரை இருந்த நார்மர் மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மது ஆலையானது வரிசையாக 40 பானைகள் பொருத்தப்பட்டு பழங்கள் மற்றும் தண்ணீர் கலந்து மதுபானம் தயாரிக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இத்தகைய மது ஆலை இருப்பது ஆங்கிலேயர்களுக்கு 1900 வருடத்திலேயே தெரியும் என்று கூறப்படுகின்றது. இருப்பினும் மது ஆலை எங்கு உள்ளது என்பது தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.