Categories
சென்னை மாவட்ட செய்திகள்

5000 விமானங்களின் சரக்குகள்…. சாதனை படைத்த ஊழியர்கள்…. குவியும் பாராட்டுகள்…!!

5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை கையாண்டு ஊழியர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சென்னை உள்பட அனைத்து விமான நிலையங்களிலும் கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதியில் இருந்து சரக்கு விமான போக்குவரத்திற்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விமான நிலையத்தில் சரக்கு விமானங்களின் வருகையும், சரக்குகளை கையாளுவதும் பல மடங்கு அதிகரித்தது. இந்நிலையில் விமான நிலைய ஆணையகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் துணை நிறுவன ஊழியர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரையிலான 5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளனர்.

இங்கு மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள், தடுப்பூசி மருந்துகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் 10 மாதங்களில் 5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்ததை கொண்டாடும் விதமாக ஊழியர்கள் கேக் வெட்டியுள்ளனர். மேலும் 5000 என்ற வடிவில் அணிவகுத்து நின்ற ஊழியர்களை விமான நிலைய அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |