Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரூ. 5,000 ரொக்கத்துடன் கரும்பும் வழங்க வேண்டும்”….. முதல்வருக்கு இபிஎஸ் கோரிக்கை….!!!!!

தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ. 1000 ரொக்க பணம்  வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பொங்கல் என்றால் முதலில் மக்கள் நினைவுக்கு வருவது செங்கரும்புதான். ஆனால் திமுக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பை சேர்க்கவில்லை. ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பரிசில் செங்கரும்பும் சேர்த்து வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பொங்கல் பரிசாக செங்கரும்பு வழங்கப்படும் என்று ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து காத்திருந்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. அதோடு தமிழக மக்கள் மத்தியிலும் செங்கரும்பை சேர்க்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த விடியா திமுக அரசு எங்களிடம் கோரிக்கை விடுத்தது போன்று தமிழக மக்களுக்கு தற்போது ரூபாய் 5000 பொங்கல் பரிசு வழங்குவதோடு, செங்கரும்மையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துக் கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |