ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க ராணுவம், 5000 மக்களை வெளியேற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். எனவே உலகின் பல்வேறு நாடுகளும் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் தூதரகங்களை காலி செய்து வருகிறது. மேலும் அமெரிக்கா போன்ற பல நாடுகள், தங்கள் மக்களை அங்கிருந்து விமானம் மூலம் அழைத்து செல்கிறது. அந்த வகையில் தற்போது வரை ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து 5,000 நபர்கள் அமெரிக்க ராணுவத்தால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதன்பின்பு, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளும் தங்கள் குடிமக்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும், அமெரிக்கா இராணுவம், வரும் தினங்களில் மேலும் அதிக மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்ற தீர்மானித்துள்ளது.
அமெரிக்க அரசு, அமெரிக்காவை சேர்ந்த மக்கள் ஆயிரக்கணக்கானோர், உள்ளூர் தூதரக ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தார், ஆபத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் போன்றோரை விமானத்தின் மூலமாக மீட்போம் என்று தெரிவித்திருக்கிறது.