அமெரிக்காவில் உள்ள நியூ மெக்ஸிகோ என்ற மாகாணத்தில் கடும் காட்டுத் தீ பரவியதில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் சேதமடைந்திருப்பதோடு ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேறி வருகிறார்கள்.
அமெரிக்காவில் உள்ள நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் இருக்கும் ருய்டோசோ என்ற கிராமத்திற்கு அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் 200க்கும் அதிகமான குடியிருப்புகள் அழிந்துவிட்டது. நேற்று வெளியான தகவலின்படி 9.6 சதுர மைல் தூரத்திற்கு காட்டுப்பகுதி தீயில் கருகிவிட்டது.
அதிகமான மின்னழுத்தம் கொண்ட கம்பிகளால் அங்கு தீ விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். மேலும் ஒரு குடியிருப்பில் முற்றிலும் உடல் கருகிய நிலையில் வயதான தம்பதியரின் சடலங்கள் மீட்கப்பட்டிருக்கிறது. காவல்துறையினரும் தீயணைப்புத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் 4,500 நபர்கள் வசிக்கும் பகுதியில் மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டிருக்கிறது. தற்போதுவரை அங்கிருந்து 60% மக்கள் வெளியேற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.