Categories
மாநில செய்திகள்

போராட்டம் நடத்திய 5000 பேர் மீது வழக்கு…!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்திய திருமாவளவன்,  ஜவாஹிருல்லா, நடிகர் சித்தார்த் உள்பட 5000 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சியுடன் சேர்ந்து பல்வேறு அமைப்புகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டை நேற்று முற்றுகையிட முயன்றனர். அப்போது பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பட்டினம்பாக்கம் போலீசார் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியது, சட்டவிரோதமாக ஒன்று கூடியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 3000 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Image result for குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

இதேபோல சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நடிகர் சித்தார்த் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை சாஸ்திரி பவன் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பெரியார் மாணவர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 5000 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Categories

Tech |