Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இப்படி விலையை ஏத்துறீங்களே….? எங்கள நாங்க அடையாளப் படுத்துவோம்…. ஒரு வார வேலை நிறுத்தம்….!!

மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக நூல் விலை உயர்வை கண்டித்து ஒரு வார வேலை நிறுத்தத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பிரதான தொழிலாக இருப்பது விசைத்தறி தொழிலாகும். இந்த பகுதியில் சுமார் 5000 விசைத் தறிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக நூல் விலை அதிகரித்து வருவதால் விசைத்தறி தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த விலை உயர்வை கண்டித்து மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 22ஆம் தேதி அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதில் எந்த பயனும் இல்லை. தொடர்ந்து நூலின் விலை அதிகரித்துக் கொண்டே இருப்பதனால் நூலை கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் நேற்று முதல் ஒரு வாரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தது.

அதேபோல் நேற்றிலிருந்து அடையாள வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். மத்திய மாநில அரசுகள் விலை உயர்வில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என விசைத்தறி தொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ஒரு வார வேலை நிறுத்தத்தின் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததைக் காணமுடிகிறது.

Categories

Tech |