Categories
உலக செய்திகள்

50,000தடுப்பூசி கொடுத்தீங்க…! ரொம்ப நன்றி இந்தியா…. புகழும் பிரபல நாடு …!!

இந்தியாவில் இருந்து 50,000 டோஸ் தடுப்பூசிகளை ருவாண்டா அரசு வாங்குவது மகிழ்ச்சி அளிக்கின்றது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து பரவிய கொடூரமான வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகின்ற நிலையில். அதற்குண்டான தடுப்பு ஊசிகள் போடப்படும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியா 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி இருக்கிறது. இதையடுத்து தற்போது ரூவாண்டாவிற்கு 50,000 டோஸ் கோவிஷேய்ல்டு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது.

இந்நிலையில் ருவாண்டாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிப்பது என்னவென்றால், இன்று காலை 50,000 covid-19 தடுப்பூசிகளை இந்தியாவிலிருந்து பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும், கொரோணாவை எதிர்த்து போராடும் இந்திய அரசுக்கு நன்றி என்றும் ருவாண்டாவின் வெளியுறவு துறை அமைச்சர் வின்சென்ட் பிருட்டா இந்தியாவிற்கு நன்றி கூறியுள்ளார்.

Categories

Tech |