Categories
இந்திய சினிமா சினிமா

50,000 சதுர அடி புல்வெளியில்… சோனு சூட் முகம்… வைரலாகும் வீடியோ…!!!

உதவி தேவைப்படுகிறது என்று நினைப்பவர்களும், கேட்பவர்களுக்கும் தானாக முன்வந்து பல நல்ல உதவிகளை செய்து வருபவர். இவர் படத்தில் வில்லனாக இருந்தாலும், நிஜத்தில் சூப்பர் ஹீரோவாக வலம் வருகிறார். சோனு சூட் கடந்த ஜூலை 30ஆம் தேதி தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் மட்டுமல்லாமல் இவர் உதவிக்கரம் நீட்டிய மக்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் நடிகர் சோனு சூட் பிறந்தநாளை முன்னிட்டு மராட்டியத்தில் உள்ள சோலாப்பூரை சேர்ந்த விபுல் மிராஜ்கர் என்பவர், 50,000 சதுரடி புல்வெளியில் சோனு சூட்டின் முகத்தை வரைந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |