Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“50,000 மதிப்பிலான புகையிலை பொருட்களை லாரியில் கடத்தல்”…. கைது செய்த போலீசார்….!!!!!

சாலையில் சென்று கொண்டிருந்த லாரியை சோதனை செய்த பொழுது 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டதையடுத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள நாடுகாணி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்த பொழுது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் வாகனத்தை சோதனை செய்த போது காய்கறி மூட்டைகளுக்கு நடுவே சிறிய பைகள் இருப்பதை கண்டு திறந்து பார்த்த பொழுது தடை செய்யப்பட்ட புகையிலை அதில் இருந்தது.

லாரியில் மொத்தம் ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைகள் கன்னியாகுமரிக்கு கடத்த முயந்திருப்பது தெரியவந்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் தர்மராஜாவை கைது செய்து லாரி மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார்கள்.

Categories

Tech |