தமிழகத்தில் 6 வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 22 லட்சத்து 33 ஆயிரத்து 219 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, முதல்வர் முக. ஸ்டாலின் அறிவுரையின்படி நேற்று முன்தினம் 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி பணிகள் நடைபெற்றது.
அதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் மற்றும் 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நடந்த 6-வது மெகா கொரோனா தடுப்பு சிறப்பு முகாம்களில் 22 லட்சத்து 33 ஆயிரத்து 219 பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும், முதல் தவணை தடுப்பூசி 8 லட்சத்து 67 ஆயிரத்து 573 பேருக்கும், 2 ஆம் தவணை தடுப்பூசி 13 லட்சத்து 65 ஆயிரத்து 646 பேருக்கும், செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.