கட்டமைப்பு சார்ந்த 8 துறைகளில் சீர் திருத்த அறிவிப்புகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறார். அதில் நிலக்கரி, சுரங்கத்துறையில் வர்த்தக ரீதியாலான மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன, ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளதால் சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது என கூறிய அவர்,
நிலக்கரித்துறை தனியார் மயமாக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டமைப்புக்கு ரூ.50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், முதற்கட்டமாக 50 நிலக்கரி சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் நிலக்கரி இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க தன்னிறைவு பெற நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், சந்தைத் தேவைகளை ஈடுசெய்ய நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து வருவாய் பகிர்வு அடிப்படையில் நிலக்கரி, சுரங்கத் துறையில் வர்த்தக ரீதியிலான அனுமதி வழங்கப்படும். நிலக்கரி படுகை மீத்தேன் ஏலம் விடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.