திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை அடுத்த மருதுவம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன். இவர்நேற்று மாலை வெளியே சென்று இருந்த பொழுது அவரது மனைவி ராஜேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாக விளக்கு எரியாமல் இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது ராஜேஸ்வரி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
பின் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் வீட்டில் விவசாயத்திற்காக வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் காணவில்லை என்று அவர் கூறியதை அடுத்து இந்த கொலை பணத்திற்காக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.