ஆனால் தற்போது அதேபோல ஒரு அழிவு நெருங்கி வருவதாக தெரிகிறது. ஆம், மனித இனத்தின் முறையற்ற நடவடிக்கை மற்றும் அதனால் ஏற்படும் பருவ நிலை மாற்றங்களாலும் அரிய வகை பூச்சி இனங்கள் தொடர்ந்து அழிந்து வருகின்றன.
மனிதர்களின் உணவுக்காக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பூச்சி இனங்கள் கொன்று அழிக்கப்படுகின்றன. அதுஒருபுறமிக்க, அதே நேரத்தில் பருவ நிலை மாற்றத்தின் காரணமாகவும் பெரும்பாலான பூச்சி இனங்கள் அழிந்து கொண்டு வருகின்றன. பூச்சி இனங்கள் அழிந்து வருவதன் காரணமாக மகரந்த சேர்க்கை உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு உணவு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தி குறைந்து வருகின்றன.
பூச்சி இனங்கள் அழிவதன் மூலம் மகரந்த சேர்க்கை நடைபெறாத காரணத்தால் சர்வதேச அளவில் ஆண்டுக்கு 235 முதல் 577 பில்லியன் டாலர் அளவுக்கு உற்பத்தி பாதிப்பு ஏற்படுவதாக ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது.