ஸ்பானிஷ் காய்ச்சலைப் போன்று கொரோனா தொற்றும் உயிர் பலியை எடுக்கும் என தொற்று நோய் நிபுணர் அண்டனி ஃபாஷி தெறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் கணக்கில்லாமல் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸால் சுமார் 13 மில்லியனுக்கு மேல் பாதிக்கப்பட்டு, 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் நடத்திய குளோபல் ஹெல்த் காணொலியில் பங்கேற்ற உலகப் புகழ்பெற்ற தொற்று நோய் நிபுணர் அண்டனி ஃபாஷி கூறுகையில், ” 1918ஆம் ஆண்டில் வந்த ஸ்பானிஷ் காய்ச்சலில் உலகம் முழுவதும் 50 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஸ்பானிஷ் வைரஸ் தான் அனைத்து வைரஸ்களுக்கும் தாயாக கருதப்படுகிறது. இந்த வைரஸ் தொற்றைப் போலவே கொரோனா வைரஸ் தொற்றும் பரவி உயிர்கொல்லும் அபாயம் உள்ளது” என்றார். மேலும், அமெரிக்காவை பொறுத்தவரை கலிபோர்னியா, புளோரிடா, அரிசோனா, டெக்சாஸ் போன்ற மாகாணங்களில் கொரோனா வைரஸ் மேலும் பரவும் நிலை ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.