உத்தரபிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள துண்டலா-கன்பூர் சென்று கொண்டிருந்த 24 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் ஒன்று எதிர்பாராதவிதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அம்பியாபூர்-ருசா ரயில் நிலையங்களுக்கு இடையே மாலை 4 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தினர்.
மேலும் சரக்கு ரயில் காலியாக இருந்ததால் பெரிய அளவில் இழப்பு ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து இந்தப் பகுதியில் வந்த அனைத்து பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்பட்டது. மேலும் சில ரயில்கள் கான்பூரில் இருந்து மாற்று பாதை வழியாக திருப்பி விடப்பட்டன.இன்று நள்ளிரவுக்குள் சீரமைப்பு பணி நிறைவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.