தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 5.88 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 5,08,263 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறியதாக 5,42,618 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்களின் 4,27,689 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.8,36,77,004 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 9,638 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியதாக இதுவரை 6,595 பேர் கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 8,812 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 19,207 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 19,307 பேர் கைதாகி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் 17,744 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.