தமிழக அரசின் அலட்சியத்தால் ரூபாய் 50 கோடி வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் நுழைந்து இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கிடைக்க வழிவகை செய்யும் விதமாக தமிழக அரசு ரேஷன் கடைகளில் இலவச அரிசி, சர்க்கரை, உள்ளிட்டவற்றை வழங்கியதுடன் ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கியது.
இந்நிலையில் ரூ500க்கு 19 வகையான மளிகைப் பொருள்கள் ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி 10 நாட்கள் ஆகியும் நடைமுறைக்கு வராததால் ரூபாய் 50 கோடி வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்த பொருளாதார நிபுணர்கள், எதற்காக அரசு மெத்தனம் காட்டுகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.