Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” 50 அடி ஆழ கிணற்றில்…. குழந்தையை போட்டு கொன்று விட்டு….. தாயும் தற்கொலை….!!

தர்மபுரி அருகே வீட்டுத் தகராறால்  தனது மகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தர்மபுரி மாவட்டம் பொன்னகரம் பகுதியை அடுத்த திம்மூர் கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தரேசன். இவரது மனைவி செந்தாமரை. இவர்கள் இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், லாவண்யா, மோனிகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சுந்தரேசன்,  செந்தாமரைக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று முன்தினமும் அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில்,

வாக்குவாதம் முற்றவே, மிகவும் மனமுடைந்த செந்தாமரை, தனது இரண்டாவது மகள் மோனிகாவை தூக்கி கொண்டு அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்திற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. பிறகு அந்த தோட்டத்தில், இருந்த 50 அடி ஆழ கிணற்றில், தனது இரண்டாவது மகளை தூக்கி வீசி கொன்று விட்டு, பிறகு அவரும் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக பொன்னகரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து அதிகாரிகள், தீயணைப்புத்துறை வீரர்களின் உதவியுடன் இருவரது உடலையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

பின் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்கையில், சொந்தக்காரர்களுக்கு உணவு அளிப்பது தொடர்பாக சுந்தரேசன் மற்றும் அவரது மனைவி செந்தாமரை ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில், சுதர்சனின் தந்தை, அவரது தம்பி, தம்பி மனைவி ஆகியோர் சேர்ந்து அவரை கஷ்டப்படும்படி  பேசியதால்,

மனமுடைந்த அவர் இரண்டு மகள்களுடன் தற்கொலை செய்ய முயன்றதாகவும், அதில், மூத்த மகள் தாயின் தற்கொலை எண்ணத்தை அறிந்து தப்பி வந்து விட்டதாகவும் இரண்டாவது மகள் தாயுடன் சேர்ந்து இறந்துவிட்டதும்  தெரியவந்தது. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதன் பெயரில், செந்தாமரையின் கணவர், கணவரது  வீட்டார் மீது அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |