தமிழகம் முழுவதும் 51 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழகம் முழுவதும் உள்ள 51 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. குறிப்பாக அடையாறு காவல் துறை துணை ஆணையராக விக்ரமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட எஸ்பி ஆக பகலவன் நியமனம் செய்யப் பட்டிருக்கிறார். இதேபோல வணிகவியல் குற்றப்பிரிவு எஸ்பியாக பாண்டியராஜன் நியமனம் செய்யப் பட்டிருக்கிறார். மாதவரம் காவல்துறை துணை ஆணையர் கோபாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் சஞ்சய் தஞ்சாவூர் எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் எஸ்பியாக இருந்த மகேஸ்வரன் கடலோர பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி ஆகி மாற்றப்பட்டுள்ளார். சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் இருந்து அரவிந்து திருவண்ணாமலை எஸ்பி ஆக பணியாற்றுகிறார். மதுரை மாவட்ட எஸ்பியாக இருந்த மணிவண்ணன் நெல்லை மாவட்ட எஸ்.பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.திருச்சி எஸ்பியாக இருந்த ஜியாவுல் ஹக் கள்ளக்குறிச்சி எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளகுறிச்சி எஸ்பியாக இருந்த ஜெயச்சந்திரன் திருச்சி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். இப்படி தமிழகம் முழுவதும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.