Categories
தேசிய செய்திகள்

“மின்னல் தாக்கி 51 பேர் பலி” பீகார் மற்றும் ஜார்கண்டில் சோகம் ….!!

பீகார் மற்றும் ஜார்கண்டில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள்  எணிக்கை 51_ஆக அதிகரித்துள்ளது என்று தகவல் தெரியவந்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான பீகார் , ஜார்க்கண்டில் தொடர்ந்து சில வாரங்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பீகாரில் மழையுடன்  இடி, மின்னல் தாக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

பீகார் மற்றும் ஜார்க்கண்டில் மின்னல் தாக்கியதில் பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு

மேலும்  5 பேர் காயமடைந்துள்ளதாகவும்  பீகார் பேரிடர் மேலாண் துறை தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பீகார் மாநில அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்படும் என்றும் , காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ள்ளது. இதே போல ஜார்க்கண்டில் 12 பேர் பலியாகியுள்ளதை  சேர்த்து பீகார் மற்றும் ஜார்க்கண்டில் மின்னல் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 51-ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |