Categories
செங்கல்பட்டு திருவாரூர் மாநில செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 51 பேருக்கு திருவாரூர், செங்கல்பட்டு மருத்துவமனையில் சோதனை!

தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 124ஆக உயர்ந்துள்ளது. இதனால் பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நேற்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்த அவர் மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து சோதனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை அடையாளம் காணும் பணி தமிழகம் முழுவதும் தீவிரம் அடைந்துள்ள நிலையில் மாநாட்டில் பங்கேற்ற 35 பேருக்கு திருவாரூரில் பரிசோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை 7, ராஜபாளையம் 4, மதுரை, தூத்துக்குடியில் தலா ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேபோல செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 46 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. சுகாதார துறையுடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு நிலையில், தமிழகத்தின் 16 மாவட்டங்களில் 1,82,815 வீடுகளில் 6,88,815 நபர்களிடம் ஆய்வு நடாத்தியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |