Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“51 வயது பெண், 26 வயது பையன்” உடன் டும் டும் டும்… சந்தோசம் கிடைக்காததால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!!

வயதான பெண்ணை சொத்துக்காக திருமணம் செய்து கொண்டு அவரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த சகா என்பவருக்கு 51 வயது ஆகின்றது. இந்த பெண்ணிற்கு சொந்தமான 10 ஏக்கர் நிலமும், வயதான தாயுடன் வசித்து வருகிறார். வருமானத்திற்காக சொந்தமாக பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். திருமணம் செய்து கொண்டால் தாயை பராமரிக்க முடியாமல் சென்று விடும் என்பதற்காக 51 வயது வரை திருமணம் செய்யாமல் இருந்து வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொண்டால் வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பவரை திருமணம் செய்ய வேண்டுமென்று நினைத்ததால்.

அவருக்கு வரன் சரிவர அமையவில்லை. இந்நிலையில் தனியார் மருத்துவமனையின் முன் அலுவலக பணியாளராக வேலை பார்த்துவந்த அருண் என்பவருடன் சகாவுக்கு காதல் ஏற்பட்டது. 51 வயது ஆனாலும் மேக்கப் மூலம் தனது பளிச்சென்று காட்டிக் கொண்டதால் அவருக்கு வயது விவகாரம் தெரியவில்லை. பின்னர் திருமணத்திற்காக அருண் தனது வீட்டில் தெரியப்படுத்தியுள்ளார். அப்போது சகாவை திருமணம் செய்ய அவரின் வீட்டில் உள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இதன் பின்னர் 10 ஏக்கர் நிலம் கிடைக்கும் எனவும், தினமும் பியூட்டி பார்லர் மூலம் வருமானம் வரும் என்ற ஆசையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார் அருண். திருமணம் செய்த கையோடு வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்த அருணை கவனிக்காமல் உடல்நிலை சரியில்லாமல் இருந்த தாயை கவனிப்பதிலேயே அதிக அக்கறை கொண்டுள்ளார் சகா. இவர்களுக்கு இடையே தாம்பத்திய உறவும், காதலும் இல்லை. இதனால் அருண் மன விரக்தி அடைந்தார். இருப்பினும் சொத்துக்காக இருக்க வேண்டும் என இருந்துள்ளார். இந்நிலையில் சகா திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை அருணின் நெருங்கிய நண்பர் ஒருவர் டேக் செய்து ஆண்வெறியின் என்றும், ஆண்டி வெறியன் என்றும் கூறியுள்ளார். இதனால் வெறுப்பான அருண் சகாவை கொலை செய்ய முயற்சித்துள்ளார். அதிலிருந்து தப்பிய சகா அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உடன் தெரியப்படுத்தியுள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று சகாவை அடித்து உதைத்து அருண் மின்சார ஒயரை உடலில் பாய்ச்சி துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். ஆனால் போலீசில் தனது மனைவி மின்சார அடுப்பில் ஏற்பட்ட மின் கசிவால் உயிரிழந்துள்ளார் எனவும் நாடகமாடி உள்ளார். மேலும் இதுகுறித்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்களின் வாக்கு மூலத்தை சாட்சியாகக் கொண்டு அவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |