Categories
மாநில செய்திகள்

52,000 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்…. மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்…. நெல்லையில் பரபரப்பு….!!!

மின் வாரியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என போராட்டம் நடைபெற்றுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மின் வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இதற்கு மண்டல செயலாளர் பீர் முகம்மது ஷா தலைமை வகித்தார். இவர்கள் கடந்த 2009-ஆம் ஆண்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

இதனையடுத்து மின்வாரிய துறையில் காலியாக இருக்கும் 52 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார். அதன்பிறகு தமிழ்நாடு மின்வாரிய சங்கங்களின் கூட்டு குழு நடவடிக்கைகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் எங்களுடைய கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் எனவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |