Categories
உலக செய்திகள்

5,250 பேர் பணிநீக்கம்….. ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Xiaomi நிறுவனம்…..!!!

முன்னணி ஸ்மார்ட் போன் தயாரிப்பாளரான ஜியோமி தனது ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஸ்மார்ட் போன் மற்றும் இணைய சேவை வணிகங்களின் பல பிரிவுகள் பணி நீக்கத்தை தொடங்கியுள்ளன. சுமார் 5,250 பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் 15 சதவீதம் ஆகும். இந்த முடிவு புதிதாக பணியில் இருப்பவர்களையும் பாதிக்கும் என கூறப்படுகிறது.

அமேசான் மற்றும் கூகுள் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே செலவு குறைப்பு மற்றும் பொருளாதாரம் அந்த நிலை காரணமாக அதிக எண்ணிக்கையில் ஊழியர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருவதால் ஊழியர்கள் அதிர்ச்சியில் இருக்கும் பட்சத்தில் தற்போது ஜியோமி நிறுவனமும் தனது ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Categories

Tech |