சென்னையில் சிறுவன் வாயில் இருந்து 526 பற்களை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த பிரபு தாஸ் என்பவரின் மகன் 3 வயதாக இருக்கும் போது வாயின் வலது பக்கத்தில் வீக்கமாக இருந்துள்ளது. இதனால் சிறுவன் அடிக்கடி வலியால் துடித்து வந்துள்ளான். அதன் பிறகு 7 வயதான போது இந்த சிறுவனுக்கு வலி அதிகமாக ஏற்பட்டுள்ளது.
இதனால் மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். பின்னர் அங்குதான் ஸ்கேன் எடுத்து பார்த்ததில் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அப்படி என்ன அதிர்ச்சியென்றால் சிறுவனின் வாயில் வலது பகுதியில் நூற்றுக்கணக்கான பற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 5 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, வாயில் இருந்து சிறிதும் பெரிதுமாக 526 பற்கள் அகற்றப்பட்டது. இது அங்குள்ளவர்களை ஆச்சர்யத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.