இந்தோனேசியாவிற்கு உரிய நீர்மூழ்கி கப்பலின் நிலை தொடர்பான அதிகாரபூர்வ தகவலை நாட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தோனேசிய இராணுவத்திற்குரிய கே.ஆர்.ஐ நங்கலா 402 நீர்மூழ்கி கப்பல் கடந்த புதன்கிழமை அன்று பாலி தீவிற்கு அருகில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது மாயமாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகள் இந்த கப்பலை தேடும் முயற்சியை மேற்கொண்டிருந்தன.
இந்நிலையில் இந்தோனேசிய கடற்படை அந்த நீர்மூழ்கிக் கப்பல் 53 நபர்களுடன் மூழ்கியது என்று உறுதிப்படுத்தியிருப்பதாக அந்த நாட்டின் ஜனாதிபதி Joko widodo அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். மேலும் widodo, கே.ஆர்.ஐ நங்கலா 402 நீர்மூழ்கி கப்பல், தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மூழ்கியதாக தெரியவந்துள்ளது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் இந்தோனேஷிய மக்கள், அந்த நீர்மூழ்கிக்கப்பலின் உதவிக்குழுவினருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்துகிறோம் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.