இந்தோனேஷியா நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த மாலுமியின் குழந்தை தன் தந்தையை போக விடாமல் தடுத்த வீடியோ காட்சி பார்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி பாலி கடற்பகுதியில் இந்தோனேசியா கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் மாயமானது . இதனிடையே இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் கப்பலை தேடும் பணியில் ஈடுபட்ட மீட்பு குழுவினர் கப்பலின் உடைந்த பாகங்கள் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து இந்தோனேஷியா கடற்படை குழுவினர் கடந்த 24 ஆம் தேதி வரை பயணிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் இருக்கும் என தெரிவித்தனர்.
ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை 53 ஊழியர்களும் மரணமடைந்து விட்டனர் என்றும் கப்பல் மீட்க முடியாத 850 மீட்டர் ஆழத்திற்கு சென்று விட்டது என்ற அதிர்ச்சி தகவலை வெளியானது. இந்நிலையில் இந்த நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த மாலுமி Imam Adi கப்பலில் பயணிக்கும் முன்னர் 2 வயது மகனுடன் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தனது தந்தையை போகக்கூடாது என குழந்தை கூறும் காட்சி காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.
இது குறித்து Imam Adi தந்தை கூறுகையில் அப்பாவும் மகனும் எடுத்துக்கொண்ட கடைசி வீடியோ என்றும் குழந்தை எப்போதும் அவரது அப்பா செல்லும் போது சிரித்துக்கொண்டே டாட்டா(Bye) சொல்லுவார் இந்த முறைதான் இப்படி நடந்து கொண்டார் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.