53 வயதில் மகள்களின் உதவியோடு தாய் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவை சேர்ந்த ஷீலா ராணி என்பவருக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்றது. இதனால் இவரின் கல்வி பாதியிலேயே தடைபட்டது. இவருக்கு தற்போது வயது 53. திருமணத்திற்கு பின் முழு நேர குடும்பத் தலைவியாக மாறினார் ஷீலா ராணி. சில வருடங்களுக்கு முன்பாக இவரது கணவரும் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் ஷீலா மகள்களின் துணையோடு பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ளார். அதேபோல அவரது பெண் பிள்ளைகள் இருவரும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் பத்தாம் வகுப்பில் தாயும், பன்னிரெண்டாம் வகுப்பில் இரண்டு மகள்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக ஷீலாவின் மகள்கள் தெரிவித்ததாவது “நாங்கள் இருவரும் சேர்ந்து தாயை தேர்வு எழுத ஊக்குவித்தோம். தற்போது அவர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் மேற்படிப்பு படிப்பதற்கும் உதவி செய்வோம்” என்று தெரிவித்துள்ளனர்.