இந்தோனேசியாவில் நீர்மூழ்கி கப்பல் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மாயமாகி உள்ளது.
இந்தோனேஷியாவின் வடக்கு பகுதி பாலி தீவு அருகே ஜாவா கடலில் கே.ஆர்.ஐ. நங்கலா-402 ரக நீர்மூழ்கி கப்பல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இந்தக் கப்பலில் கடற்படையினர் மற்றும் மாலுமிகள் என 53 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது அந்த நீர்மூழ்கி கப்பல் கடந்த 21ஆம் தேதி 4:30 மணி அளவில் பாலிதீவு கடற்பரப்பில் 95 கிலோ மீட்டர் தொலைவில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டு அறையை தொடர்பு துண்டிக்கப்பட்டு திடீரென மாயமாகி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த இந்தோனேசியா கடற்படையினர் தீவிரமாக செயல்பட்டு நீர்மூழ்கி கப்பல் கடைசியாக கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புடைய கடற்பரப்பில் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டது.
மேலும் இந்த மாயமான கப்பலைத் தேடும் பணிக்கு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளிடம் இந்தோனேஷியா கடற்படை உதவியை நாடியது. நீர்மூழ்கி கப்பலை தேடும் பணிக்காக இந்தியாவிலிருந்து ஆழ்கடல் நீர்மூழ்கி மீட்பு கப்பலை அனுப்பி வைத்தது. ஆனாலும் இப்போதுவரை மாயமான கப்பலை தேடும் பணி தொடர்ந்து கொண்டே வருகிறது .
அதில் பயணம் செய்தவர்களில் நிலைமை குறித்தும் இந்தோனேசியா கடற்படையினர் வருத்தம் தெரிவித்து வருகின்றன. அமெரிக்க அரசும் கப்பலை தேடும் பணியில் உதவி வருகிறது. இந்தோனேசியாவின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் விமானம், ஹெலிகாப்டர் உள்ளிட்ட வான்வெளி தளவாடங்களை அமெரிக்கா அனுப்பிவுள்ளது.