Categories
உலக செய்திகள்

கொரோனா பயம்… “என்னை விடுவியுங்கள்”… பாடகரான பாலியல் குற்றவாளி வேண்டுகோள்!

வாஷிங்டனில் கொரோனாவால் அச்சமடைந்திருக்கும் 53 வயது பாடகர் ஆர் கெல்லி, பாலியல் குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் தன்னை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று என்ற தமக்கும் பரவி விடுமோ பயத்தால் சிறையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு பாலியல் குற்றத்தில் கைதுசெய்யப்பட்ட ஹாலிவுட் பாடகர் ஆர் கெல்லி கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று குறிப்பாக வயது முதிர்ந்தவர்களை குறிவைத்து தாக்குவதுடன் மரணத்தையும் ஏற்படுத்துகிறது. தற்போது பாடகர் கெல்லி (53) மீது கொரோனா தொற்று தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதால் அவரை உடனே விடுவிக்க வேண்டும் என்று பாடகரின் தரப்பு வழக்கரிஞர்கள் சிகாகோவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

மேலும், அவர் சிகாகோ மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு கிருமி நாசினி, சோப் ஆகியவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவில் இருக்கிறது. அதேபோல ஒரு அறையில் 2 கைதிகளை அடைக்கும்போக்கு நிலவிவருகின்றது. தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க சமூக விலகலை கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாக இருந்தாலும் இதனைச் செயல்படுத்தவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

R Kelly asks to be released from prison in light of coronavirus ...

அத்துடன், பார்வையாளர்களுக்கான பாத்ரூமில் சோப், காகித துண்டுகள் இல்லாமல் இருப்பது சிறைக்கு கைதிகளைப் பார்க்கவருபவர்கள் அனைவரும் கைகழுவாமல் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

எந்தக் குற்றங்கள் புரிந்திருந்தாலும் கைதியின் உயிருக்கு முக்கியத்துவம் தருவதை நீதிமன்றங்கள் நீண்டகாலமாகக் கடைப்பிடித்துவருகின்றன என்று பாடகர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மனு தொடர்பாக இதுவரை உத்தரவு எதுவும் வராத நிலையில், சிறையில் இருக்குமாறு பாடகர் கெல்லியை வழக்கரிஞர்கள் வலியுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

பல்வேறு பாலியல் குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்துவரும் கெல்லி மீதான வழக்குகளின் விசாரணை வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இதனிடையே தற்போது கொரோனா அச்சத்தால் விடுதலை செய்யுமாறு கோரியுள்ளார்.

இவரைப்போலவே பல்வேறு குற்றங்களுக்காகச் சிறையில் இருந்து வரும் பிரபலங்கள் சிலரும் விடுவிக்குமாறு வேண்டுகோள்விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |