லண்டனில் நபர் ஒருவர் 53 வயது பெண்ணிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் சில தகவல்களை தெரிவித்துள்ளனர்.
கிழக்கு லண்டனில் பேருந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த போதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. குறித்த பேருந்து அக்னி நகரை நெருங்கும் முன்னர் பேருந்தில் இருந்த 53 வயது மதிக்கத்தக்க பெண்ணின் அருகே ஒருவர் சென்று தவறாக நடந்துள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சியில் இருந்து குறித்த நபரின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
அவர் பற்றிய தகவல் யாருக்கேனும் தெரிந்தால் காவல் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தலாம் என கேட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாதுகாப்பு இல்லாத உணர்வை ஏற்படுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.